வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... போலீஸ் அதிகாரி தாக்கியதில் நடுரோட்டில் மயங்கி விழுந்த கடைக்காரர்!

 
போலீஸ்


ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரின் தாக்குதலால் கடைக்காரர் ஒருவர் மயங்கி விழுந்தார். இச்சம்பவம்  மே 29ம் தேதி நடந்த நிலையில் தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதில், சாலையின் நடுவில் போலீசார் கடைக்காரரை தாக்கும் காட்சியும், அவர் மயங்கி விழும் தருணங்களும் தெளிவாக காணப்படுகிறது.


அந்த பகுதியில் உள்ள ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி  புஷ்பேந்திர பன்சிவால்  கடையில் வேலை செய்யும் ரிஸ்வானிடம்  அவரது கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை நகர்த்தும்படி  கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் பைக்கில் பூட்டு இருந்ததால் நகர்த்த முடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை காரணமாகக் கொண்டு, அதிகாரி ரிஸ்வானை திட்டியதோடு  அவரை நடுரோட்டில் தாக்கியும் உள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து  ரிஸ்வான் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இது குறித்த  வீடியோ வெளியாகியதும், அதிகாரியின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. “ஒரு தவறான வாகன நிறுத்தத்திற்காக ஒரு போலீஸ்காரர் இப்படியாக ஒரு சாதாரண நபரை தாக்குவது எந்த சட்டத்தின் கீழ்?” என ஒரு பயனர் வினவினார்.  


அத்துடன், “@KotaPolice அதிகாரியை நடவடிக்கையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்துள்ளன.   இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது