மே 30ம் தேதிக்குள் கடைகளில் தமிழில் பெயர் பலகை… காலஅவகாசம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

 
 மே 30ம் தேதிக்குள் கடைகளில் தமிழில் பெயர் பலகை… காலஅவகாசம் வழங்க  உயர் நீதிமன்றம் உத்தரவு!  


தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள், கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை மாற்றுவது குறித்து  சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியும் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  மே 30ம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் வைக்க வேண்டும், தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் 3 வது மொழியில் கூட பெயர் வைத்துக் கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சி  உயர்நீதிமன்றம்
இதை செய்யத் தவறினால் ரூ 2000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் இருக்கக்கூடிய இந்திய சில்லறை  வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில்  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் உலகஅளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிக சின்னங்களுடைய அடிப்படையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்ட வேண்டும் என்றும் அவற்றை மாற்றும்பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் என்றும் அந்த மனதில் கூறப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
அரசு உத்தரவை அமல்படுத்த தயாராக இருந்த போதிலும் நிதி உட்பட  உடனடியாக இந்தப் பெயர் பலகையை மாற்ற முடியாது என்பதால் இந்தப் பெயர் பலகையை மாற்றுவதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.  இந்நிலையில் கால அவகாசம் வழங்க கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது