பகீர்... விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு கம்பி.... !

 
சுருக்கு கம்பி


நீலகிரி மாவட்டத்தில் வனக்கோட்டம், ஊட்டி தெற்கு வனச்சரகம், ரீஸ் கார்னர் பிரிவு முள்ளிக்கொரை பகுதியில் தனியார் விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த விவசாய நிலம் வனத்தை ஒட்டி அமைத்துள்ளது.இந்த வனத்தில் ஊட்டி தெற்கு வனச்சரக பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டு இருந்தனர். வனத்தை ஒட்டி விவசாய தோட்டத்தின் வேலி ஓரத்தில் சுருக்கு கம்பி இருந்ததை கண்டுபிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மின்வேலி
இது குறித்த விசாரணையில் தனியார் விவசாய நிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும்  சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கலோராம் ராத்ரே  கடந்த சில நாட்களுக்கு முன்பு, வனத்தில் இருந்து தோட்டத்திற்குள் புகுந்த காட்டு பன்றி, முயல், காட்டாடு ஆகியவை  பயிர்களை சேதப்படுத்தியதாகவும், காட்டு விலங்குகள் வருவதை தடுக்கும் பொருட்டு அவற்றை வேட்டையாடுவதற்காக சுருக்கு கம்பிகள் வைத்ததாகவும் கூறினார். 

போலீஸ்


இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட விவசாய நிலத்தின் உரிமையாளரிடம்  சுருக்கு கம்பி வைத்து வன விலங்குகளை வேட்டையாடுவது வனச்சட்டத்தின்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் தொழிலாளர்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.  வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு கம்பி வைத்த குற்றத்திற்காக மாவட்ட வன அலுவலர்  உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.50000  அபராதம் விதிக்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது