மைக்ரோசிப் தட்டுப்பாடு.. டி.வி., செல்போன் விலை 20% வரை உயரப் போகுது!
கடந்த சில மாதங்களாகவே எலக்ட்ரானிக் சாதனங்களின் விலை ஏறுமுகத்தில் உள்ள நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் (பிப்ரவரி - மார்ச் 2026) மேலும் ஒரு பெரும் விலை உயர்வை நுகர்வோர் சந்திக்க நேரிடும் எனத் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், உலகெங்கிலும் உள்ள தரவு மையங்களுக்கு அதிகப்படியான மெமரி சிப்கள் தேவைப்படுகின்றன. இதனால் சாம்சங், எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற நிறுவனங்கள் சாதாரண எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான சிப் உற்பத்தியைக் குறைத்து, ஏஐ சிப்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

கவுண்டர்பாயிண்ட் அறிக்கையின்படி, மார்ச் மாதத்திற்குள் மைக்ரோசிப் மற்றும் ரேம் (RAM) விலைகள் 120% முதல் 160% வரை அதிகரிக்கக்கூடும். இதன் தாக்கம் நேரடியாகத் தயாரிப்புச் செலவில் எதிரொலிக்கும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால், இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பாகங்களின் விலை மேலும் அதிகரிக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிசிக்களின் விலை 5% முதல் 20% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ (Vivo), நத்திங் (Nothing) போன்ற சில பிராண்டுகள் ஏற்கனவே ஜனவரி மாதத்தில் தங்களது மாடல்களின் விலையை ₹3,000 முதல் ₹5,000 வரை உயர்த்தியுள்ளன.

சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கேஷ்பேக் (Cashback) மற்றும் நேரடித் தள்ளுபடிகளைக் குறைத்து வருகின்றன. வரவிருக்கும் குடியரசு தின விற்பனையிலும் பெரிய அளவிலான தள்ளுபடிகளை எதிர்பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
விலை உயர்வு காரணமாக, குறிப்பாக ₹20,000-க்கும் குறைவான பட்ஜெட் போன்களின் விற்பனை 10% முதல் 12% வரை குறைய வாய்ப்புள்ளதாக அகில இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
