'எனது கடவுள் நம்பிக்கைதான் என்னை வலிமையாக்கியது' - நடிகை ஸ்ருதிஹாசன்!
கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கை தான் என்னை வலிமையாக்கியது. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் தற்போது சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், ஸ்ருதிஹாசன் தனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்று தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'கடவுள் சக்தியை அதிகம் நம்புகிறேன். கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைத்தான் வாழ்க்கையில் என்னை வலிமையாக்கியது. எனது வீடு ஒரு நாத்திக இல்லமாக இருந்தது. எனது தந்தை நாத்திகவாதி. இதனால் வளரும்போது கடவுள் என்ற கருத்து எங்களுக்கு இருந்தது இல்லை.
ஒரு கட்டத்தில் கடவுள் நம்பிக்கையை எனக்குள் நானே கண்டுபிடித்தேன். நான் முதலில் கோவிலுக்கு சென்றது மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை இன்றுவரை விரும்புகிறேன்' என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!