சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா... இந்தியா பெருமிதம்!

 
சுபான்ஷு சுக்லா


 
 ஆக்ஸியம்-4  திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4  விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை  வெற்றிகரமாக அடைந்துள்ளனர்.  சுக்லாவுடன், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன் (அமெரிக்கா), ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி (போலந்து), மற்றும் திபோர் கபு (ஹங்கேரி) ஆகியோர் பயணித்தனர்.

சுபான்ஷு
இந்த பயணம், தொழில்நுட்ப பிரச்சினைகளால் 6  முறை தடைபட்ட நிலையில்  ஜூன் 25ம் தேதி  இந்திய நேரப்படி பிற்பகல்  12:01க்கு  புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ்-ன் பால்கன் 9 ராக்கெட் மூலம் கிளம்பினர்.  இந்த விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில்   ஜூன் 26, 2025 அன்று மாலை 4:30 மணியளவில் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

சுபான்ஷு சுக்லா

இந்த பயணத்தின் மூலம், சுபான்ஷு சுக்லா 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியராக அறியப்படுகிறார்.  1984-ல் ராகேஷ் ஷர்மா முதல் இந்தியராக விண்வெளிக்கு பயணம் செய்தார்.  இந்த 14 நாள் பயணத்தில், விண்வெளி வீரர்கள் 31 நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். இதில் இந்தியாவின் 7 பரிசோதனைகளும் அடங்கும், இவற்றில் தாவர உயிரியல், நுண்ணுயிர் ஆய்வுகள், மற்றும் மைக்ரோகிராவிட்டி ஆராய்ச்சி ஆகியவை முக்கியமானவை. குறிப்பாக, விண்வெளியில் பிராணவாயு மற்றும் நீர் இல்லாத சூழலில் செடிகள் மற்றும் பயிர்களின் வளர்ச்சி குறித்த ஆய்வு, விண்வெளியில் உணவு உற்பத்தி மற்றும் நீண்டகால பயணங்களுக்கு முக்கியமானதாகும். மேலும், புவியீர்ப்பு இல்லாத சூழலில் பொருட்களின் நடத்தை, உயிரியல், மற்றும் தொழில்நுட்ப சோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.இந்த பயணம் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு முக்கிய அடித்தளமாக அமையும்.  2035ல் பாரதிய அந்தரிக்ஷ நிலையம் மற்றும் 2040-ல் நிலவுக்கு மனிதரை அனுப்பும் இந்தியாவின் லட்சியங்களுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது