சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு புறப்படும் முன் கேட்ட ஏ.ஆர். ரஹ்மான் பாடல்!

 
  சுபான்ஷு சுக்லா ஏ.ஆர். ரஹ்மான்


இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று ஜூன் 25ம் தேதி இந்திய நேரப்படி  12.01க்கு சர்வதேச விண்வெளி மையத்திற்கு  புறப்பட்டு சென்றார். இதில்  சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4  திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  பயணம் மேற்கொள்கின்றனர். இந்தப் பயணம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39A இலிருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களை, க்ரூ டிராகன் விண்கலம் மூலம் பால்கான் 9 ராக்கெட் அழைத்துச் செல்ல உள்ளது.

  சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, விண்வெளி பயணத்திற்கு தயாராகும் முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை விரும்பி கேட்டு உற்சாகமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஜூன் 24, 2025 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்  முக்கியமான பயணத்தில் கலந்து கொள்ள சுக்லா, 2004ம் ஆண்டு வெளியான ‘தேசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ Yun Hi Chala Chal’ என்ற பாடலை தேர்வு செய்தார்.  

ஏ.ஆர். ரஹ்மான்
‘யூன்’ பாடல், தேசபக்தி மற்றும் உணர்ச்சி நிறைந்த வரிகளால், இந்திய இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இச்சம்பவம் சுக்லாவின் மன உறுதியையும்,  இந்திய கலை மற்றும் கலாச்சாரத்துடனான அவரது பிணைப்பையும் எடுத்துக் காட்டுகிறது.  ஏ.ஆர்.ரஹ்மான், உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக, தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தியவர்.  இவரது இந்த செயல், இந்திய இசையின் கலாச்சார முக்கியத்துவத்தை விண்வெளி அளவிற்கு  கொண்டாடுவதாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது