இன்று பிற்பகல் 12.01க்கு சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ... ஸ்பேஸ் எக்ஸ் திட்டவட்டம்.!

 
ஆக்சியம் 4
 


 
 இன்று ஜூன் 25, 2025ம் தேதி  இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் ஆக்சியம்-4  திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.இந்தப் பயணம் அமெரிக்காவின்  புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39A இலிருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களை, க்ரூ டிராகன் விண்கலம் மூலம் பால்கான் 9 ராக்கெட் அழைத்துச் செல்ல உள்ளது.


ஆக்சியம் திட்டம் 4 ராக்கெட் செயல்பாடுகள் அனைத்தும்  90% விண்ணில் ஏவுவதற்கு சாதகமான சூழலில் உள்ளது, திட்டமிட்டபடி, இந்திய நேரப்படி பிற்பகல்  12.01 மணியளவில் ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக  ஸ்பேஸ் எக்ஸ் கூறியுள்ளது.

இந்தப் பயணம் மோசமான வானிலை மற்றும் திரவ ஆக்சிஜன் கசிவு போன்ற  தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 6 முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு  இன்று நடைபெறுகிறது. 1984ல் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் சுபான்ஷு சுக்லா ஆவார்.

சுபான்ஷு சுக்லா
ஆக்சியம்-4 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதும், Axe-4 பயணத்தின் கீழ் உள்ள விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 14 நாட்கள் தங்குகின்றனர்.  இந்த நாட்களில்  அவர்கள் நுண் ஈர்ப்பு விசை, உயிர் அறிவியல் மற்றும் பொருள் அறிவியல் தொடர்பான பல அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். இந்த சோதனைகள் உலகம் முழுவதிலும்  உள்ள 30 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது