தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் விளையாட மருத்துவக் குழு அனுமதி!

 
சுப்மன் கில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில், காயம் காரணமாகப் பாதியில் வெளியேறியிருந்த இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சுப்மன் கில், தற்போது முழு உடல் தகுதியை எட்டியுள்ளதால், அவர் டி20 தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அவர் அணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.

சுப்மன் கில் - சாய் சுதர்சன்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, இந்தியா 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் டிசம்பர் 9-ஆம் தேதி கட்டாக்கில் ஆரம்பமாகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகக் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியின்போது கழுத்து வலியால் சுப்மன் கில் பாதியில் வெளியேறினார்.

டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்தாலும், உடல் தகுதியை நிரூபித்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுப்மன் கில் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தில் உடல் தகுதியை நிரூபிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவர் முழு உடல் தகுதியை எட்டியுள்ளதால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியில் சுப்மன் கில் விளையாட உள்ளார்.

சுப்மன் கில்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!