பாத்ரூமில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த SI கைது... முதல்வரின் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலருக்கு நேர்ந்த கொடூரம்!

 
பாலியல்

தியாகி இமானுவேல் சேகரனின் மணிமண்டபத்தைத் திறந்து வைக்க முதலமைச்சர் நேற்று ராமநாதபுரம் வருகை தந்திருந்தார். இதற்காகப் பல மாவட்டங்களில் இருந்தும் காவலர்கள் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்தப் பாதுகாப்புப் பணியின்போதுதான் சக பெண் காவலரிடமே ஒரு உயர் அதிகாரி அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடி மணி நகர் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணிக்காகத் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதே பகுதியில் பரமக்குடி நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) முத்துப்பாண்டியும் பணியில் இருந்தார். அங்குள்ள கழிவறைக்குச் சென்ற பெண் காவலர், அங்கு ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் ஒன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த போனில் வீடியோ பதிவு ஓடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

ஆபாசம் பாலியல் சிசிடிவி செல்போன் பாலியல் மிரட்டல்

அந்த செல்போனை ஆய்வு செய்த போது, அது அங்கு பணியில் இருந்த SSI முத்துப்பாண்டியுடையது என்பது உறுதியானது. அதில் ஏற்கெனவே பெண் காவலர்கள் கழிவறைக்குச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண் காவலர் இது குறித்து உடனடியாகப் புகார் அளித்தார்.

செல்போன் சிசிடிவி ஆபாச வீடியோ புகைப்படம்

இந்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முத்துப்பாண்டி மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். உடனடியாகக் கைது செய்யப்பட்ட முத்துப்பாண்டி, ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரைப் பணியிடை நீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!