2,789 நாட்களுக்கு மேல் முதல்வராக ஆட்சி புரிந்து சித்தராமையா சாதனை... குவியும் வாழ்த்துகள்!
கர்நாடக மாநிலத்தை அதிக நாட்கள் ஆட்சி செய்த முதல்வர் என்ற பெருமையை சித்தராமையா பெற்றுள்ளார். இதன்மூலம் முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் நீண்ட நாள் சாதனையை அவர் முறியடித்துள்ளார். மாநில அரசியலில் இது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 35 ஆண்டுகளாக கர்நாடகத்தில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் தேவராஜ் அர்ஸ். அவர் 1972 மற்றும் 1978 தேர்தல்களில் வெற்றி பெற்று, 2,789 நாட்கள் முதல்வராக பதவி வகித்தார். அவருக்கு அடுத்த இடத்தில் நிஜலிங்கப்பா 7 ஆண்டுகள் 175 நாட்கள் முதல்வராக இருந்தார்.

இந்த நிலையில் சித்தராமையா ஜனவரி 6-ம் தேதியுடன் தேவராஜ் அர்ஸின் சாதனையை சமன் செய்தார். ஜனவரி 7-ம் தேதி முதல், கர்நாடகாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த முதல்வர் என்ற புதிய சாதனை அவருக்கே சொந்தமானது. மாநில வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
