வெள்ளி விலை வெறித்தன ஏற்றம்… தங்கம் ரூ.1.04 லட்சம்... !
புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம், வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. சமீபத்தில் தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாறு படைத்தது. வெள்ளி விலையும் கிலோ ரூ.2½ லட்சத்தை கடந்து அதிர்ச்சி அளித்தது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.12,890-க்கும், பவுன் ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.254-க்கும், கிலோ ரூ.9,000 உயர்ந்து ரூ.2,54,000-க்கும் சென்றது. இன்று மேலும் அதிரடி ஏற்றம் காணப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.274-க்கும், கிலோ ரூ.20,000 உயர்ந்து ரூ.2,74,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 11 நாட்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ரூ.52,000 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000-க்கும் விற்கப்படுகிறது. நாளுக்கு நாள் விலை ஏறுவதால் தங்கமும் வெள்ளியும் சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
