“விஜய்க்கு வெள்ளி செங்கோல்... ‘புரட்சி தளபதி’ பட்டம்...” - மாஸ் காட்டிய செங்கோட்டையன்!

 
விஜய் செங்கோட்டையன் செங்கோல்

ஈரோடு மண்ணே இன்று அதிர்கிறது வாசகர்களே! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோட்டில் நடத்திய மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்ரோஷமான ஒரு அரசியல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மஞ்சள் மாநகரான ஈரோட்டில், "மஞ்சள் என்றாலே ஒரு தனி வைப் தான், நம் கொடியிலும் அந்த மஞ்சள் இருக்கிறது" என்று மங்களகரமாக ஆரம்பித்த விஜய், அடுத்த சில நிமிடங்களிலேயே ஆளுங்கட்சியான திமுகவை நோக்கி அனல் பறக்கும் ஏவுகணைகளை வீசத் தொடங்கிவிட்டார். "எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களை நம்பி வந்திருக்கும் இந்த விஜய்யை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்" என்று அவர் உருக்கமாகப் பேசியபோது மைதானமே உணர்ச்சிப் பெருக்கில் மிதந்தது.

தனது அரசியல் பயணத்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் நிழலில் செதுக்கியுள்ள விஜய், "பெரியார் எங்கள் கொள்கை முன்னோடி, ஆனால் பெரியார் பெயரைக் கூறிக்கொண்டு இங்கே கொள்ளையடிக்காதீர்கள்" என்று திமுகவை நேரடியாக விளாசினார். 100 ஆண்டுகளுக்கு முன்பே இடஒதுக்கீடு கேட்ட பெரியாரை நெம்புகோல் என்று புகழ்ந்த விஜய், அதே மூச்சில் "அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து, அவர்களைப் பயன்படுத்த யாருக்கும் தனி உரிமை கிடையாது" என்று கூறி அண்ணா நாமம், வாழ்க நாமம் என்று முழங்குபவர்களுக்குச் செம நோஸ்கட் கொடுத்தார்.

விஜய் செங்கோட்டையன்

விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் திமுக அரசின் செயல்பாடுகளைத் தோலுரிப்பதாகவே இருந்தது. "அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தாமல் வெறும் கதைகளை மட்டும் அடித்து விடுகிறார்கள். அனைவரும் சொந்த வீட்டிலா இருக்கிறீர்கள்? அத்தனை பேரும் வாடகை வீட்டில்தானே இருக்கிறோம்? இதில் எங்கே வீட்டு வசதித் திட்டம் சாதனை படைத்தது?" என்று அவர் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் சாமானிய மக்களின் குரலாக எதிரொலித்தன. குறிப்பாக, "மக்களின் காசில் மக்களுக்குச் செய்வதை இலவசம் என்று கூறி அசிங்கப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை, ஓசியில் போவதாகச் சொல்லி மக்களை இழிவுபடுத்தாதீர்கள்" என்று அவர் சீறியபோது கைதட்டல்கள் அடங்க வெகுநேரம் ஆனது.

திமுகவுக்கும் பிரச்சினைகளுக்கும் 'பெவிகால்' போட்டது போன்ற பந்தம் என்று கிண்டலடித்த விஜய், "என்னை முடக்க 24 மணி நேரமும் அரசு சிந்தித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் மாறுவேடத்தில் மரு வைத்துக்கொண்டு வருபவர்கள் மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துவிடுகிறார்கள்" என்று நக்கலாகக் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பேச்சின் உச்சக்கட்டமாக, "எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஏன் திமுகவை இப்படி விமர்சித்தார்கள் என்று இப்போதுதான் புரிகிறது. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி! தவெக ஒரு தூய சக்தி!" என்று அவர் மூன்று முறை ஆவேசமாக முழங்கியது 2026 தேர்தலுக்கான போர் முரசாகவே பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையன்

இந்த எழுச்சிமிகு கூட்டத்தின் இறுதியாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது கட்சிக்குப் பெரும் பலம் என்று குறிப்பிட்ட விஜய், அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். அப்போது எதிர்பாராத விதமாக, செங்கோட்டையன் விஜய்க்கு ஒரு பிரம்மாண்டமான "வெள்ளி செங்கோல்" வழங்கி கௌரவித்தார். ஒரு பக்கம் தீய சக்தியை வீழ்த்தப் போவதாகச் சூளுரை, மறுபக்கம் கையில் மின்னும் வெள்ளி செங்கோல் என ஈரோடு மைதானமே ஒரு புதிய ஆட்சி மாற்றத்திற்கான அச்சாரம் போலக் காட்சியளித்தது. இனி தமிழக அரசியலில் தூய சக்திக்கும் தீய சக்திக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்பது உறுதி ஆகிவிட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!