திருட்டுத்தனமாக வெள்ளியில் முதலீடு... கணவனிடம் வசமாக சிக்கிக் கொண்ட மனைவி!

 
silver silver

சீனாவில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வெள்ளி விலை உயர்ந்து வருவதாகக் கேட்டு அதில் முதலீடு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனுக்குத் தெரியாமல் வீட்டில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்று வெள்ளிப் பாளங்களில் முதலீடு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் எதிர்பாராத விதமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் வெள்ளி விலை திடீரென சரிந்தது. இதனால் அந்த பெண் முதலீடு செய்த பெரும்பாலான பணம் இழந்ததாக கூறப்படுகிறது. குறுகிய காலத்தில் பெரிய லாபம் பெறலாம் என்ற நம்பிக்கை ஒரே நேரத்தில் முறிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஷயம் தெரிய வந்ததும் குடும்பத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சேமித்து வைத்திருந்த பணம் இழந்ததால் கணவன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், யோசிக்காமல் முதலீடு செய்வது குடும்ப வாழ்க்கையையே பாதிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!