கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படத்தில் நடித்து வரும் சிம்பு, தற்போது அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புக்கு தற்காலிக இடைவேளை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வு எடுக்காமல் உலகம் பேசும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்கவே அவர் சென்றிருக்கிறாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக கமல் ஹாசன் அமெரிக்காவில் தங்கி ஏ.ஐ. குறித்து பயின்றது ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அதேபோல் சிம்புவும் புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக்லைஃப்’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த சிம்புவை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய திரையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
‘அரசன்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி படம் விலகியதாக வெளியான தகவல் உண்மையல்ல என்றும், அவர் படத்தில் தொடர்ந்து நடிக்கிறார் என்றும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
