"நண்பனைக் கொலை செய்து 3 ஆண்டுகளாக தலைமறைவு.. மனசாட்சி உறுத்தியதால் ரவுடி 'டவர்' முருகன் தாமாக சரண்!

 
gopi gopi

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சமையல் தொழிலாளியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த அவரது நண்பர் "மனசாட்சி உறுத்துவதாகக் கூறி" நேற்று நீதிமன்றத்தில் அதிரடியாகச் சரணடைந்தார். எஸ்.கணபதிபாளையத்தைச் சேர்ந்த சமையல் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (46), கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி சமையல் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், தடப்பள்ளி வாய்க்கால் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மர்மக் கொலை குறித்துக் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 ஆண்டுகளாகக் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

police

இந்நிலையில், இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறி கிருஷ்ணமூர்த்தியின் நண்பரான 'டவர்' முருகன் (46) என்பவர் கோபி சார்பு நீதிமன்றத்தில் நேற்று திடீரெனச் சரணடைந்தார். போலீஸ் விசாரணையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர வைக்கிறது. சம்பவத்தன்று முருகன், அவரது நண்பர் சரவணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட திடீர் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த முருகன், மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

கொலை, கத்தி

"நண்பனை நானே கொன்றுவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக என்னை வாட்டியது; இரவில் தூக்கம் வரவில்லை, மனசாட்சி உறுத்தியதால் இனி தலைமறைவாக இருக்க விரும்பாமல் சரணடைந்துவிட்டேன்" என முருகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். முருகனின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான சரவணனைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கொலையாளி தாமாக வந்து சரணடைந்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!