பயணிகள் உற்சாகம்.... இனி பேருந்து நடத்துனர்களிடமே சிங்கார சென்னை அட்டை .. !

 
சிங்கார சென்னை
 

 

சென்னையில் பொது போக்குவரத்தை மேலும் எளிதாக்கும் வகையில், சிங்கார சென்னை அட்டையை இனி பேருந்து நடத்துநர்களிடமே பெற்றுக்கொள்ளும் வசதியை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் தடையின்றி பயணிக்க இந்த அட்டை பயன்படுகிறது. இதற்காக மாநகர் போக்குவரத்துக் கழகம், கும்டா மற்றும் மாநகராட்சி இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதுவரை சிங்கார சென்னை அட்டைகள் குறிப்பிட்ட பணிமனைகள் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. பயணிகள் நேரில் சென்று கட்டணம் செலுத்தி அட்டையை வாங்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நடைமுறையை எளிமைப்படுத்த, தற்போது பேருந்து நடத்துநர்களிடமே அட்டையை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நடத்துநர்களிடம் ரூ.100 செலுத்தி சிங்கார சென்னை அட்டையை வாங்கிக்கொள்ளலாம். இதில் ரூ.50 மதிப்பில் பயணம் செய்ய முடியும். தேவைக்கு ஏற்ப ஆன்லைன் மூலம் கூடுதல் ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயணிக்கலாம். ஏற்கெனவே சென்னை ஒன் செயலிக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இந்த புதிய வசதி அட்டையின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!