பிண்ணனி பாடகர் யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார்... வதந்திகளை நம்பாதீங்க!

 
யேசுதாஸ்

 

பிரபல பாடகரான யேசுதாஸ், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு யேசுதாஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. 

யேசுதாஸ் - இளையராஜா

கே.ஜே.யேசுதாஸ், கர்நாடக இசைக் கலைஞரும் புகழ் பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில், வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில், 7 முறை தேசிய விருது பெற்றுள்ளார். அதேபோல் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்க மாநில அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த பாடகராக விருது பெற்றுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் யேசுதாஸ் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் தான், கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. 

யேசுதாஸ்

ஆனால், இந்தத் தகவல் உண்மையில்ல்லை என யேசுதாஸ் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து பாடகர் யேசுதாஸ் உதவியாளர் சேது இயாள் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்காவில் இருக்கும் பின்னணி பாடகர் யேசுதாஸ் அவர்கள் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக தமிழகத்தில்  செய்திகள் வருகிறது. அது உண்மை இல்லை என்றும் அவர் பூரண நலத்துடன் இருக்கிறார். நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் நலமுடன் இருக்கிறார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு யேசுதாஸ் கேட்டு கொண்டுள்ளார்” என சொல்லப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web