ஒரே மேடை… மூன்று மொழிகள்… பிக் பாஸ் ஹோஸ்ட்கள் அசத்தல் சந்திப்பு

 
பிக்பாஸ்
 

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றியது ரசிகர்களை கவர்ந்தது. சென்னையில் நடைபெற்ற ‘செளத் அன்பவுண்ட்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, மோகன் லால், நாகர்ஜுனா ஆகியோர் ஒன்றாகக் கலந்து கொண்டனர். ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய மொழி இணையத் தொடர்களுக்காக தமிழக அரசுடன் இணைந்து ரூ.4,000 கோடி முதலீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பிக் பாஸ் ஒளிபரப்பாகுவதால், மூன்று மொழி தொகுப்பாளர்களும் ஒரே மேடையில் தோன்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். அந்தக் காட்சி நிகழ்ச்சிக்கு சிறப்பு கூட்டத்தை ஏற்படுத்தியது.

விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவன் நான் என வெளிப்படையாக கூறினார். தொகுப்பாளராக வர தயக்கம் இருந்தாலும், அதில் உள்ள உளவியல் அம்சங்களை உணர்ந்தபின் விருப்பமாகச் செய்கிறேன் என்றார். மனிதர்களை கவனிப்பதற்கான சிறந்த பாடம் பிக் பாஸ் என்றும், போட்டியாளர்களில் தன்னைப் பார்க்க முடிகிறது என்றும் கூறிய அவர் பேச்சு பலரையும் கவர்ந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!