தமிழகத்தில் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன!
தமிழகம் முழுவதும் இதுவரை 6.16 கோடி வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். (சிறப்பு கணக்கெடுப்பு) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எந்த வகையிலும் கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

படிவங்களை பெற்ற வாக்காளர்கள் அவற்றை முடிந்தவரை விரைவாக பூர்த்தி செய்து திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களில் இதுவரை 50 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், இரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு எஸ்.ஐ.ஆர். படிவத்திலும் நிச்சயமாக பெயர் இடம்பெறும். மக்கள் வழங்கும் தகவல்கள் சரியானதாக இருந்தால் எந்தப் படிவமும் நிராகரிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டால் அதற்கான காரணம் உரிய முறையில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
