நாளை எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்... !

 
எஸ்ஐஆர்
 

தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பிக்க நாளை (டிச.11) கடைசி நாள். இதுவரை 6.40 கோடி படிவங்களில் 99.55 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய இந்தப் பணியில் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 6.41 கோடி வாக்காளர்களில் பெரும்பாலானவர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு, முகவரி மாற்றம், இரட்டை பதிவு, உயிரிழந்தோர் உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 2.88 லட்சம் படிவங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளதால், அவற்றை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல்

படிவ சமர்ப்பிப்பு முடிவடைந்ததும் தகுதியற்ற பதிவுகள் நீக்கப்பட்டு, டிசம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் பெயர் விடுபட்டவர்கள் புதிதாக சேர முடியும். வரைவு பட்டியல் தயாரிப்புப் பணிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் நியமித்த 4 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!