பெரும் சோகம்... அக்கா, தங்கை இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை!

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் சுரண்டை சாம்பவர்வடகரை கீழுர் பொய்கை மெயின்ரோடு பகுதியில் வசித்து வருபவர் வைத்தியலிங்கம். இவரது மனைவி சரோஜா. வைத்தியலிங்கத்தின் உடன் பிறந்த சகோதரர் பரமசிவம். அவருடைய மனைவி இந்திரா.
சரோஜாவும், இந்திராவும் அக்கா-தங்கை இருவரும் அண்ணன் தம்பியை திருமணம் செய்து கொண்டு கூட்டு குடும்பமாக பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இரு குடும்பங்களுக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதனால், இரு குடும்பங்களும் பிரிந்து தனித்தனியே வசித்து வந்தனர். இந்நிலையில், அக்கா-தங்கையான சரோஜாவும், இந்திராவும் நேற்று முன் தினம் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றாக இருந்த குடும்பம் சொத்து பிரச்சினையால் தற்போது பிரிந்து கிடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் சாவிலாவது குடும்பத்தினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இருவரும் தங்கள் வீடுகளில் இருந்து ஒன்றாக வெளியேறி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!