திருமண மேக்கப்புக்கு வந்த அக்கா-தங்கைக்கு பாலியல் தொல்லை... விபத்தில் சிக்கி அக்கா பலி... தங்கை கவலைக்கிடம் !

 
திருமண மேக்கப்புக்கு வந்த அக்கா-தங்கைக்கு பாலியல் தொல்லை... விபத்தில் சிக்கி அக்கா பலி... தங்கை கவலைக்கிடம் ! 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ராமதாஸ்பூர் கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது மெஹந்தி போடுவதற்காக ஆர்டிஸ்ட்டான அக்கா- தங்கை இருவர் வந்திருந்தனர்.மருதாணி வைத்த பிறகு அவர்கள் மணப்பெண் அலங்காரத்திற்கு உதவி செய்தனர். நள்ளிரவு நேரமானதால் அக்கா தங்கை இருவரும் வீட்டிற்கு எப்படி செல்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே திருமண வீட்டைச் சேர்ந்த 3 பேர் காரில் அழைத்துச் செல்கிறோம் என கூறினர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

இதனை நம்பி சகோதரிகள் இருவரும் காரில் ஏறிக் கொண்டனர். அப்போது காரில் இருந்த விகாஸ், அஜய், ஆதர்ஷ் மூவரும் சகோதரிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தனர். இதனால் அந்த பெண்கள் அலறி சத்தம் போட்டனர்.அவர்களது வாயை பொத்தி 3 இளைஞர்களும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அக்கா தங்கை இருவரும் காரில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்தனர்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அக்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கை படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த தங்கையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவி பாலியல் வழக்கு!! ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது  குண்டர் சட்டம்!!

மற்றொரு பெண்ணின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மற்ற 2 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?