குண்டா இருப்பதால் தங்கை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை... கதறி துடித்த அண்ணன்!
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தில் வசித்து வருபவர் இப்ராகிம் பாஷா. இவர் டிரைவராக பணிபுரிந்து வரும் நிலையில் இவரின் பாசத்துக்குறிய தங்கை சம்சத் பேகம். இவர்கள் இருவரும் அதிக உடல் பருமனாக இருந்ததால் மிகக் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இதற்காக அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் கோவை காந்திபுரத்துக்கு காரில் வந்து ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். அப்பொழுது அவர்கள் ஹோட்டல் அதிகாரியிடம் உடல் பருமனுக்கு ஆயுர்வேத சிகிச்சை பெற வந்து இருப்பதாக கூறினர். அவர்கள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. இப்ராஹிம் பாஷா திடீரென ஹோட்டல் அறையில் இருந்து வரவேற்பு அறைக்கு வந்து ஏ.டி.எம் மில் பணம் எடுத்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார்.

வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறைக்கு சென்றனர். அந்த அறை பூட்டப்பட்டு இருந்தது. உடனே ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்ற போது சம்சத் பேகம் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்தது. இதில் சம்சத் பேகம் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடல் அருகே ஒரு கடிதம் கிடந்தது. அதில் நானும், அண்ணனும் உடல் பருமனால் அவதிப்படுவதாகவும், வாழப் பிடிக்காததால் இருவரும் தற்கொலை செய்து கொள்வதாகவும், இருவரின் உடல்களையும் ஒன்றாக அடக்கம் செய்யும்படி எழுதப்பட்டு இருந்தது.

சம்சத் பேகத்தின் உடலை போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கை சம்சத் பேகம் தற்கொலை செய்த நிலையில், இப்ராஹிம் பாஷாவை தேடத் தொடங்கியது. இப்ராஹிம் பாஷா வந்த காரின் பதிவு எண் மற்றும் அதில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் அந்த கார் கோவை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் இப்ராஹிம் பாஷாவை பார்த்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொள்வதற்காக தங்கையுடன் சேர்ந்து தூக்க மாத்திரைகளை தின்றதாகவும், தங்கையை விட குறைந்த எண்ணிக்கையில் தூக்க மாத்திரை தின்றதால் அவர் இறக்கவில்லை எனக் கூறினார். இதனால் பிளேடை உடைத்து விழுங்கியதாகவும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக கோவை ரயில் நிலையம் பகுதிக்கு வந்ததாகவும் கூறினார். உடனே காவல் துறையினர் இப்ராஹிம் பாஷாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடல் பருமனை குறைக்க இப்ராஹிம் பாஷா அவரது தங்கை சம்சத் பேகம் ஆகியோர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தனர். உடல் எடை குறையாததால் அவர்கள் இரண்டு பேரும் கோவைக்கு வந்து தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இதில் சம்சத் பேகம் இறந்த நிலையில், அவருடைய உடலை பார்த்து இப்ராஹிம் பாஷா கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
