விஜய்யின் கடைசிப் படத்தில் சிவ ராஜ்குமார்!
நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்திருப்பதால் சினிமாவுக்கு விரைவில் முழுக்கு போட உள்ளார். அந்த வகையில் தற்போது உருவாகி வரும் விஜய் 69 படம் தான் திரையுலகில் அவரது கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பாக கேரள மாநிலம் பைய்யனூரில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் பாடல் காட்சிகளை எடுக்கப்பட்டன. அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடல் குத்து பாடலாக உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தான் நடிக்க உள்ளதாகக் கூறியுள்ளார். இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சிவ ராஜ்குமார் தளபதி 69 படத்தின் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு என்னைக் கேட்டார்கள்.
எனது படப்பிடிப்பு தேதிகளை வைத்துதான் அதில் நடிப்பேனா என்பது தெரியும். இது விஜய்யின் கடைசிபடம் எனக் கூறுகின்றனர். என்னைப் பொறுத்தவரை இது கடைசி படமாக இருக்காது. ஒரு நண்பராக நலம் விரும்பியாக சொல்கிறேன் விஜய் அற்புதமான நடிகர். நல்ல மனிதர். சினிமாவிலும் அரசியலிலும் நல்ல ஆர்வம் உடையவர். அதற்காக அவரை மதிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!