கிரிக்கெட் வீராங்கனை சஜனாவுக்கு உதவிய சிவகார்த்திகேயன்!

 
சஜனா சிவகார்த்திகேயன்

கேரள மாநிலம் வயநாடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீராங்கனை சஜனாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவியதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வீராங்கனை சஜனா தெரிவித்திருந்தார். 

வயநாடு வெள்ளத்தில் தனது வீடு, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று பெற்றிருந்த பதங்கங்கள், விளையாட்டு உபகரணங்களை என அனைத்தும் அடித்து செல்லப்பட்ட நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தவித்திருந்த போது, தனக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவி செய்ததாக 'கனா' திரைப்பட நடிகையும், கிரிக்கெட் வீராங்கனையுமான சஜனா தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் சஜானா

கேரள பழங்குடியினத்தை சேர்ந்த சஜனாவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வளர்ந்த சஜனா, இவற்றையெல்லாம் கடந்தே சாதித்திருக்கிறார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான சஜனா பெண்கள் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் சஜனாவின் சமீபத்திய நேர்காணலில், "2018 வயநாடு வெள்ளத்தின் போது தனது வீடு அடித்துச் செல்லப்பட்டது. அதில் நான் வாங்கிய கோப்பைகள், மெடல்கள், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அந்தக் கையறு நிலைதான் நான் எத்தனை ஆதரவான சூழலில் உள்ளேன் என்பதை உணர்த்தியது. பல எதிர்பாராத உதவிகளையும் பெற்றுத் தந்தது. அப்படியான ஓர் உதவிதான் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் சார் என்னை அழைத்துப் பேசினார். உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். நான் அவரிடம் "அண்ணா, என்னுடைய கிரிக்கெட் கிட் மொத்தமாக வெள்ளத்தில் போய்விட்டது. எனக்கு புதிதாக ஒரு ஸ்பிக்ஸ் வேண்டும்" என்று கேட்டேன். அடுத்த ஒரு வாரத்தில் எனக்கு புதிய ஸ்பிக்ஸ் கிடைத்தது" என்று கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில்  வெளியான 'கனா' திரைப்படத்தில் சஜனா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web