பிறந்தநாளில் அண்ணாமலையாரை தரிசித்த சிவகார்த்திகேயன்.. செஃல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன், இன்று தனது 41வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு சிவகார்த்திகேயன் இன்று அதிகாலையிலேயே தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளில் அவர் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டார்.
கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து, கோயில் பிரசாதங்கள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகார்த்திகேயனைப் பார்த்த ரசிகர்கள், கோயில் வளாகத்தில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சமூக வலைதளங்களான எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் #HBD சிவகார்த்திகேயன் மற்றும் #Sivakarthikeyan ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
பின்தங்கிய மனைவி.. சட்டென்று திரும்பி பார்த்து சிவகார்த்திகேயன் செய்த செயல்.. பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம்.#Tiruvannamalai | #Temple | #Sivakarthikeyan | #SK | #Birthday pic.twitter.com/tTPEEJRwDQ
— PttvOnlinenews (@PttvNewsX) February 17, 2026
திரைப்பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், சுவரொட்டிகள் ஒட்டியும் அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
பொதுவாக நட்சத்திரங்களின் பிறந்தநாளில் அவர்களது அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் அல்லது 'டீசர்' வெளியாவது வழக்கம். அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படங்களின் அப்டேட்டுகளை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
