மாஸ் வீடியோ... மனைவிக்கு ’ஷாக் சர்ப்ரைஸ்’ கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

 
சிவகார்த்திகேயன்

  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அமரன்’ படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில்  போட்டியாளராக பங்கேற்று அந்த புகழின் காரணமாக  சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். இவர் ஆங்கராக இருந்த காலகட்டத்தில்  இவருக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 


அதன் பிறகு "மெரினா"  திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி  மெல்ல மெல்ல சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க தொடங்கினார். சிறந்த நடிகராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் விளங்கி வருகிறார். இன்னும் 40 வயதை எட்டவில்லை என்றாலும், அடுத்த தளபதி என்று சொல்லக்கூடிய அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறமையால் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்போடு திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். 
2010ல் ஆர்த்தி என்பவரோடு திருமணம் நடந்து முடிந்தது. 14 ஆண்டுகளாக மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் இந்த ஜோடிக்கு, ஒரு பெண் குழந்தையும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். தன்னுடைய திரையுலக வாழ்க்கையை எந்த அளவுக்கு சிறப்பாக நடத்தி வருகிறாரோ, அதே அளவிற்கு தன்னுடைய குடும்ப வாழ்க்கையையும் மிக நேர்த்தியாக செயல்படுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். 


திரைத்துறையில் கஷ்டங்களும், எதிர்ப்புகளும், சோதனைகளும் வந்தாலும்  ஆறுதல் குறிக்கொண்டு, குடும்ப பொறுப்பையும் தனக்காக ஏற்றுக்கொண்டு தங்களை வழிநடத்தி வரும் தன்னுடைய மனைவி ஆர்த்தி குறித்து பல மேடைகளில் பெருமையாக சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.  இந்நிலையில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் தனது மனைவி ஆர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொன்னதோடு, அமரன் திரைப்பட படப்பிடிப்பின் போது முகுந்த் வரதராஜன் கெட்டப்பில் இருந்தவர், தனது இல்லத்திற்கு சென்று சமையல்கட்டில் சமைத்துக் கொண்டிருந்த ஆர்த்திக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாக பதிவிடப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!