இது ‘அண்ணன் – தம்பி’ பொங்கல் தான்... மோதல் இல்லை... சிவகார்த்திகேயன் பளிச்!

 
vijay

2026 பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிப்பில் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ திரைப்படங்கள் வெளியாகின்றன. ஜனவரி 9-ம் தேதி ‘ஜனநாயகன்’, 10-ம் தேதி ‘பராசக்தி’ திரைக்கு வருகிறது. அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்க்கு இது கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘ஜனநாயகன்’ விஜய் படம் என்பதால், இதில் ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கும் என்ற நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

ஜனநாயகன்

‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட கதை என்பதால், வின்டேஜ் ரசிகர்களுக்கு படம் விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் இரண்டு பெரிய படங்கள் மோதுவதால், சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய் ஜனநாயகன்

இந்த நிலையில் ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், பொங்கல் ரிலீஸ் குறித்து விளக்கம் அளித்தார். விஜய் படம் பொங்கலுக்கு வருவது தெரிந்ததும், ரிலீஸ் தேதியை மாற்றலாமா என கேட்டதாகவும், ஆனால் தேர்தல் காரணமாக மாற்ற முடியவில்லை என தயாரிப்பாளர் தெரிவித்ததாகவும் கூறினார். விஜயிடம் நேரடியாக அனுமதி கேட்டபோது, அவர் மகிழ்ச்சியுடன் ஓகே சொல்லி வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார். “ஜனவரி 9-ம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தை கொண்டாடுங்கள். 10-ம் தேதி ‘பராசக்தி’யையும் கொண்டாடுங்கள். இது மோதல் இல்லை, அண்ணன் – தம்பி பொங்கல்” என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!