சட்டவிரோதமாக தங்கியிருந்த 6 வெளிநாட்டினர் .... தானேவில் பரபரப்பு!
இந்தியாவில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்கி இருப்பதை கண்டறிந்து கைது செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில், மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கார்கர் பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
நேற்று முன்தினம் தொடங்கிய சோதனையில், அப்பகுதியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 6 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் விசா இன்றி இந்தியாவில் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 6 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாக தங்குவதற்கு வீடு வாடகைக்கு கொடுத்ததாக 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
