குழாயை மூட மறந்ததால் வீட்டின் முன்புறம் பனிச்சறுக்கு மைதானம்!

 
பனிச்சறுக்கு
 

கன்சு மாகாணம் லான்ஜோவில் வசிக்கும் வாங் என்ற பெண், ஜனவரி 16 அன்று இரவு குளித்து முடித்த பிறகு சோலார் வாட்டர் ஹீட்டர் குழாயை அணைக்க மறந்தார். அன்றைய இரவு வெப்பநிலை மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததால், தொட்டியிலிருந்து வெளியேறிய நீர் உறைந்து வீட்டு முன்புற சாலைகள் முழுவதும் பனிக்கட்டியாக மாறியது.

மறுநாள் காலை 6 மணியளவில் உடற்பயிற்சிக்காக வெளியே வந்த வாஙின் தந்தை, சாலைகள் முழுவதும் பனிச்சறுக்கு மைதானம் போல மாறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆரம்பத்தில் வேறு எங்கிருந்தோ தண்ணீர் வந்ததாக நினைத்த அவர், பின்னர் அது தங்களுடைய வீட்டிலிருந்து வெளியேறியதை உணர்ந்தார்.

சமூக ஊடகங்களில் பரவிய இந்த சம்பவம் அண்டை வீட்டாருக்கு ஏற்படுத்திய சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து, வாங் மன்னிப்பு கோரும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். சிறிய தவறும் இயற்கை சூழ்நிலையுடன் சேரும்போது பெரிய விளைவுகளை உருவாக்கக்கூடியது என்பதை உணர்த்தும் நிகழ்வாக இது அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!