அரிய வகை தோல் நோயால் குடும்பமே பாதிப்பு.... சமூக வலைதளம் மூலம் பிரபலம்!
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் மனுரங் குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தில் உள்ள 6 சகோதர, சகோதரிகளில் 4 பேருக்கு அரிய வகை பாதிப்பு உள்ளது. குடும்பத்தின் மீது சாபம் உள்ளது என தவறாக பேசப்பட்டது. ஆனால் உண்மையில், இது தந்தையிடமிருந்து பரம்பரையாக வந்த மரபணு பாதிப்பு தான்.
இந்த பாதிப்பு மருத்துவத்தில் ‘டிரீச்சர் கல்லின்ஸ் சிண்ட்ரோம்’ என அழைக்கப்படுகிறது. இதனால் முக அமைப்பு மாறும். தோல் பலவீனமடையும். ஆனால் உள்ளுறுப்புகள் எந்த பாதிப்பும் அடையாது. வெளிப்புற தோற்றம் காரணமாக பலர் அவர்களுடன் பழக தயங்கினர்.
ஒதுக்கப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் தளரவில்லை. தினசரி வாழ்க்கை, சவால்கள், அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். டிக்டாக், இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோக்கள் வைரலானது. இப்போது உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோரின் கவனத்தை அவர்கள் ஈர்த்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
