’விண்ணை தாண்டும் இந்தியா’... 2026-க்கான இஸ்ரோவின் 7 முக்கியத் திட்டங்கள்!?

 
இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO), 2026 மார்ச் மாதத்திற்குள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள ஏழு முக்கிய விண்வெளிப் பயணங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மாநிலங்களவையில் மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று (டிசம்பர் 4) அளித்த பதிலில் இந்தக் கூடுதல் தகவல்கள் வெளியாகின. விண்வெளித் துறையில் இந்தியாவின் வலிமையைப் பறைசாற்றும் வகையில், மார்ச் 2026-க்குள் நிறைவேற்றப்படவுள்ள 7 திட்டங்களின் பட்டியலைப் பார்க்கலாம் வாங்க.

இஸ்ரோ

எல்விஎம்3 எம்6/என்எஸ்ஐஎல்: பிரத்யேக வணிக ரீதியிலான செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம். பிஎஸ்எல்வி சி62/இஓஎஸ் என்1: புவி கண்காணிப்புக்கான செயற்கைக்கோள்கள் செலுத்துதல். எச்எல்விஎம்3 ஜி1/ஓஎம்1: இந்தியாவின் முக்கிய விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதி. ஜிஎஸ்எல்வி எஃப்17/இஓஎஸ்-05: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளைச் செலுத்துதல். பிஎஸ்எல்வி சி63/டிடிஎஸ்-01: உயர் உந்துவிசை மின்சார உந்துவிசை அமைப்பு (High Thrust Electric Propulsion System) உட்படப் புதிய தொழில்நுட்பங்களை நிரூபிக்கும் செயற்கைக்கோள். பிஎஸ்எல்வி என்1/இஓஎஸ்-10: கடல் சார்ந்த ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள். எஸ்எஸ்எல்வி எல்1/என்எஸ்ஐஎல்: நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் (NSIL) பிரத்யேக வணிகச் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம்.

இஸ்ரோ

விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனம், வணிகச் செயற்கைக்கோள் பயன்பாடுகளில் இந்தியாவின் போட்டித் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தேவை சார்ந்த முறையில் வணிகச் செயற்கைக்கோள் பணிகளை என்எஸ்ஐஎல் மேற்கொண்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!