காளான் சூப்பில் 'தூக்க மாத்திரை'... தோழியின் நகையைச் சுருட்டிய அரசு மருத்துவமனை நர்ஸ்!

 
நர்ஸ் சூப்

நோயாளிகளைக் காக்க வேண்டிய செவிலியர் ஒருவரே, சக செவிலியரின் நகையைத் திருடப் போட்ட 'ஸ்கெட்ச்' ஆதம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுனிதா. இவர் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவருடன் பணிபுரியும் மற்றொரு செவிலியர் நான்சி நிஷா. நான்சி நிஷா தனது வீட்டிற்கு வருமாறு சுனிதாவை அழைத்துள்ளார். தோழியின் அழைப்பை ஏற்று அவர் வீட்டிற்குச் சென்ற சுனிதாவிற்கு, நான்சி அன்போடு 'காளான் சூப்' கொடுத்துள்ளார்.

நர்ஸ்

சூப்பை குடித்த சிறிது நேரத்திலேயே சுனிதா நிலைகுலைந்து மயக்கமடைந்துள்ளார். அவர் மயங்கியிருப்பதைப் பயன்படுத்திக் கொண்ட நான்சி, சுனிதா கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை லாவகமாகக் கழற்றிக் கொண்டார். மயக்கம் தெளிந்து வீட்டிற்குச் சென்ற சுனிதா, தனது தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளிக்க, ஆதம்பாக்கம் போலீசார் விசாரணையில் இறங்கினர்.

நான்சி நிஷா மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இறுதியில், காளான் சூப்பில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து நகையைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!