சிறிய விமானம் அவசர தரையிறக்கம்... 6 பேர் படுகாயம்!

 
ரூர்கேலா
 

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், புவனேஸ்வர் நோக்கிச் சென்ற தனியார் விமானம் ஏ-1, ரூர்கேலாவுக்கு 10 கி.மீ. முன்னதாக அவசரமாக தரையிறங்கியதில் தரையில் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பினர். பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலைய இயக்குநர் பிரசன்ன பிரதான், “விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். காயமடைந்தவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

ஓடிசா வர்த்தகம் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் பி.பி. ஜெனா, மாநில அரசு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு சம்பவம் தொடர்பான தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருகின்றதையும் தெரிவித்தார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!