நோயாளிகளைத் தொடாமலே ‘ஸ்மார்ட் நாற்காலி’ சிகிச்சை! திருச்சி மாணவர் அசத்தலான கண்டுபிடிப்பு!

 
கொரோனா

சீனாவில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவி உலகையே மிரட்டியது. உடனடியாக அதற்கான தடுப்பு மருந்து  கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது சவாலாக இருந்தது கொரோனா பாதித்தவர்களை மருத்துவர்கள், செவிலியர்கள் அருகே சென்று சிகிச்சை அளிப்பதுதான். அதனால் பல மருத்துவர்கள் தொற்று பரவி உயிரிழந்தனர். 

இதற்கு தீர்வு காணும் வகையில், திருச்சி கல்லூரி மாணவர் ஒருவர் கண்டுபிடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி புனித வளனார் கல்லூரியில் முதுகலை மின்னணுவியல் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் சுபாஷ் (21). ஸ்மார்ட் நாற்காலியை கண்டுபிடித்துள்ளார். 

கொரோனா அதிகமாக பரவிய காலகட்டத்தில், தொற்று தாக்கிய நோயாளிகளை டாக்டர்கள் அருகில் சென்று தொட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது டாக்டர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம், கையுறை, நவீன தற்காப்பு உடைகளை அணிந்து கொண்டு பரிசோதனை செய்தனர். அந்த சமயத்தில் தொற்று வீரியம் காரணமாக சிகிச்சை அளித்த டாக்டர்களையும் தாக்கியது. இதில் நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள் என பலர் உயிரிழக்க நேரிட்டது.  

கொரோனா

பின்னர் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தற்போது டாக்டர்கள், நோயாளிகள் அருகில் செல்லாமல், அவர்களது ரத்த ஓட்டம், இதய துடிப்பு, உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் வகையில் ‘அதிசய’ ஸ்மார்ட் நாற்காலியை மாணவர் சுபாஷ், கண்டுபிடித்துள்ளார். 

இதுகுறித்து மாணவர் சுபாஷ் கூறுகையில், இளங்கலை 3ஆம் ஆண்டு பயிலும் போது தான், கொரோனா லாக் டவுன் போடப்பட்டது. எனவே அந்த சமயத்தில் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்றால், சற்று இடைவெளிவிட்டு, அவர்களை தொடாமல் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் பெரும்பாலும் நோயாளிகளுக்கு முதலில் அவர்கள் பரிசோதிப்பது, ரத்த ஓட்டம் சீராக உள்ளதா, இதயதுடிப்பு சீராக உள்ளதா, உடல் வெப்ப நிலை சரியாக உள்ளதா என்ற இந்த 3 பரிசோதனைகள் மிகவும் பொதுவானதாக மாறியதால்,  அந்த மருத்துவர்களின் கஷ்டமான சூழ்நிலையை அருகில் இருந்து பார்த்தேன். எனவே வைஃபை மூலம் மருத்துவர்களின் செல்போன்களில் ஒரு நோயாளியின் ரத்த ஓட்டம், இதயதுடிப்பு, வெப்பநிலை உள்ளிட்டவைகளை அறிந்துகொள்ளும்படி ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்க திட்டமிட்டேன். 

கொரோனா

அதன் விளைவாக தான் இந்த ஐஓடி அடிப்படையிலான ‘ஸ்மார்ட் நாற்காலியை’ உருவாக்கினேன். அதனை முதலில் எங்கள் கல்லூரிக்கு அறிமுகப்படுத்தினேன். கடந்த ஆண்டு ‘இன்னொவேஷன் 2022’ என்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தேன். பின்னர் ஒன்றிய அரசின் விக்யான் சர்வத்ரா புஜ்யாத்தின் தேசிய அறிவியல் வார போட்டியில் பங்கேற்றபோது எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்தனர் என்றார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web