15 கிராம மருமகள்களுக்கு ஸ்மார்ட்போன் தடை… கிராம பஞ்சாயத்து அதிரடி முடிவு!

 
செல்போன்
 

ராஜஸ்தான் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமரா வசதி கொண்ட மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என கிராம பஞ்சாயத்துகள் தடை விதித்துள்ளன. காசிபூர் கிராமத்தில் நடந்த சமூகக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கிராமத் தலைவர் சுஜ்னராம் சவுத்ரி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

பெண்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களை வீட்டிலுள்ள குழந்தைகள் அடிக்கடி எடுத்து விளையாடுவதாகவும், இதனால் குழந்தைகளின் கண் பார்வை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பஞ்சாயத்து தரப்பு விளக்கம் அளித்துள்ளது. குழந்தைகளின் நலனே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன்

இதனால் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக பெண்கள் கீபேட் போன்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் கல்விக்காக மொபைல் போன் தேவைப்பட்டால், வீட்டுக்குள் மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 26 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!