ஸ்மிருதி மந்தனா மணமகனும் மருத்துவமனையில் அனுமதி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் குடும்பத்தில் மகிழ்ச்சியை முந்தி துயரம் வந்து தட்டியுள்ளது. திருமணத் தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, முதலில் ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு ஒரு நாள் முன்பும் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருந்த இவர், திடீரென மாரடைப்பு அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக குடும்பத்தினர் அறிவித்தனர்.
இதே வேளையில், மணமகன் பலாஷ் முச்சலுக்கும் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஸ்மிருதியை விட அவரது தந்தையுடன் அதிக நெருக்கம் கொண்டிருந்த பலாஷ், உடல்நலக் குறைவு ஏற்பட்டவுடன் திருமணத்தை தள்ளிப்போட வேண்டும் என்ற முடிவை எடுத்ததாக அவரது தாயார் கூறியுள்ளார். தொடர்ந்து வருந்தி அழுது மன அழுத்தத்தில் இருந்ததால் உடல் சக்தி குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் விளக்கினார். பரிசோதனைகளின் பின்னர் பலாஷின் உடல்நிலை ஆபத்தற்றதாக இருந்தாலும், அதிக மன உளைச்சல் காரணமாக ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், ஸ்மிருதியின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருமண விழாவிற்கு முன்பன்று மகிழ்ச்சியுடன் பாடலுக்கு நடனமாடிய அவர், உடல் நலக்குறைவை முதலில் மறைத்திருந்ததாகவும் பின்னர் நிலை மோசமடைந்ததால் ஆம்புலன்ஸ் அழைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டியதாகவும் குடும்பத்தினர் கூறினர். மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக இருந்த திருமண வீடு துயரச் சூழலில் திளைத்த நிலையில் உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
