62 ரன்கள் தான்... சுப்மன் கில் சாதனையை முறியடிக்கப் போகும் ஸ்மிருதி மந்தனா!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை மகளிர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 5ஆவது மற்றும் கடைசிப் போட்டி இன்று இரவு திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
தொடரை முழுமையாக வென்று முடிக்க இந்திய அணி களமிறங்குகிறது. ஆறுதல் வெற்றிக்காக இலங்கை அணி போராடும். இதனால் இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா சாதனை வாசலில் நிற்கிறார். இன்றையப் போட்டியில் அவர் 62 ரன்கள் எடுத்தால், 2025ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார். ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்த ஆண்டில் இதுவரை ஸ்மிருதி மந்தனா 1,703 ரன்கள் குவித்துள்ளார். இது ஓர் ஆண்டில் ஒரு வீராங்கனை எடுத்த அதிகபட்ச ரன்களாகும். அவரது ஆட்டம் தொடர்ந்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதே நேரத்தில், ஆண்கள் பிரிவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை சேர்த்து 1,764 ரன்களுடன் ஷுப்மான் கில் முதலிடத்தில் உள்ளார். அந்த சாதனையை முறியடிக்க ஸ்மிருதிக்கு இன்னும் 62 ரன்கள் மட்டுமே தேவை. இன்றைய போட்டியில் அவர் அதை எட்டுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
இதற்கு முன், 28 வயதான ஸ்மிருதி சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தமாக நான்காவது வீராங்கனையாகவும் அவர் பதிவானார். இலங்கைக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில்தான் இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
