ஸ்மிருதி மந்தனா திருமண புகைப்படங்கள்... வைரலாகும் 'தேசி கேர்ள்' டான்ஸ் - காதலர் பலாஷ் ரியாக்‌ஷன் என்ன?!

 
ஸ்மிருதி  மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரும், சமீபத்தில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா, இன்று காலை இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநருமான பலாஷ் முச்சால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் தனிப்பட்ட முறையில் நடைபெற்றது.

திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் நடந்த 'சங்கீத்' (சங்கீத இரவு) நிகழ்ச்சியின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன. இதில் ஸ்மிருதி மந்தனா ஆடிய ஸ்பெஷல் டான்ஸ், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


சங்கீத் நிகழ்ச்சியின் வீடியோவில், ஸ்மிருதி மந்தனா தனது வருங்கால கணவர் பலாஷ் முச்சாலை மேடையில் ஆச்சரியப்படுத்தும் வகையில், "யே தூனே க்யா கியா..." பாடலுக்கு நடனமாடினார். அதனைத் தொடர்ந்து, அவர் குடும்பத்துடன் இணைந்து பிரபல பாலிவுட் பாடலான "தேசி கேர்ள்" (Desi Girl) பாடலுக்கு மேடையில் அதிரடியாக நடனமாடினார். ஸ்மிருதி மந்தனாவின் இந்த உற்சாகமான நடனத்தைப் பார்த்த பலாஷ் முச்சால், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார். இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஸ்மிருதி

ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் இடையேயான காதல் கதை மிகவும் சுவாரசியமானது. இருவருக்கும் முதன்முதலில் 2019ம் ஆண்டு மும்பையில் அறிமுகம் ஏற்பட்டது. இந்த நட்பு சில காலத்திலேயே காதலாக மலர்ந்தது. தங்களது கிரிக்கெட் மற்றும் இசைத் துறைகளில் கவனம் செலுத்த, சுமார் ஐந்து வருடங்கள் இந்த உறவை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தனர். 2024ம் ஆண்டு ஜூலை மாதம் தான் இந்த உறவு பொது வெளியில் அறிவிக்கப்பட்டது.

ஸ்மிருதி

பலாஷ், ஸ்மிருதிக்கு ப்ரபோஸ் செய்த விதம் மிகவும் விசேஷமானது. அவர், ஸ்மிருதியை கண்களை கட்டியபடி அழைத்துச் சென்று, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் வைத்து திருமணப் பிரபோசல் செய்தார். இது சமீபத்தில் இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்ற அதே மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக பலாஷ் முச்சால் தனது கையில் ஸ்மிருதி மந்தனாவின் பெயரின் முதல் எழுத்துக்களையும், அவரது ஜெர்சி எண்ணான 'SM18' என்ற எண்ணையும் பச்சை குத்தியுள்ளார் 

கிரிக்கெட் உலகின் 'லேடி தல' என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்மிருதி மந்தனா, இன்று தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார். ரசிகர்களும் பிரபலங்களும் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!