அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ... 15 பேர் பலி!

 
பனி

அமெரிக்காவின் நியு மெக்ஸிகோ, டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, டென்னசி உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான பனிப்புயல் மற்றும் உறைபனி நிலவி வருகிறது. 20 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சாலைகள் மூடப்பட்டு, மரங்கள் மற்றும் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் சிரமம் உண்டாகியுள்ளன.

நியூ மெக்சிகோ முதல் மெய்ன் வரை உள்ள 18 மாகாணங்களில் ஒரு அடிக்கு மேல் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பிலடெல்பியா, நியூயார்க், பாஸ்டன் போன்ற நகரங்களில் பனி மழை தொடர்ந்து பெய்து விமான சேவைகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஞாயிறன்று 11,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, திங்கள்கிழமை மேலும் 6,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்த பனிப்புயலால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் சிலர் உடல் வெப்பநிலை குறைவு காரணமாக, சிலர் பனியை அகற்றும் பணிகளில் உயிரிழந்தனர். மிசிசிப்பி ஆளுநர் டேட் ரீவ்ஸ் கூறியபடி, உதவிக்காக சுமார் 500 தேசியக் காவல் படையினரை அனுப்பி வைச்சுள்ளனர். நாடு முழுவதும் பனிப்புயலின் தாக்கம் மிகவும் தீவிரமாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!