கடும் பனிப்பொழிவால் கோரம்… தொடர் விபத்தில் 3 பேர் பலி!

 
பனிப்பொழிவு

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஜெர்மனியின் பெடர்போர்ன் நகரில், பெலிபீல்ட் அருகே மார்ஷ்பெல் – லிட்ச்னா சாலை சந்திப்பில் பயங்கர விபத்து ஏற்பட்டது. பனிப்பொழிவின் போது அடுத்தடுத்து கார்கள், பைக்குகள், லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதின. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடும் பனிப்பொழிவு, வெளிச்சமின்மை மற்றும் சாலையில் வாகனங்கள் வழுக்கியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!