பிப்ரவரி 13 வரை சென்னை உட்பட 13 மாவட்டங்களில் பனிமூட்டம்!
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 13ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திண்டுக்கல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் மாவட்டங்களில் அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
