3ல் 2 பங்கு அளவு பனிப்புயல்… அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் அவசர அலெர்ட்!

 
அமெரிக்கா

அமெரிக்காவை இந்த வார இறுதியில் தீவிர குளிரலை மற்றும் வரலாறு காணாத பனிப்புயல் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட செய்தியில், மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அரசு முழு அளவில் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க தேசிய வானிலை சேவை மையத்தின் தகவலின்படி, மத்திய அமெரிக்கா மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் மிதமானது முதல் கடுமையான அளவு வரை பாதிப்புகள் ஏற்படலாம். சி.என்.என். வெளியிட்ட செய்தியில், இந்த பனிப்புயலால் நாட்டின் 3-ல் 2 பங்கு மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 2 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு பனி மற்றும் பனிப்படலம் பரவக்கூடும்.

இந்த பனிப்புயல் கிழக்கு நோக்கி நகரும் நிலையில், மின் இணைப்புகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கானோருக்கு பல நாட்கள் மின்சாரம் தடைபட வாய்ப்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து அலபாமா, ஜார்ஜியா, லூசியானா, டென்னஸ்ஸீ உள்ளிட்ட 15 மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் அமெரிக்கர்களில் பாதிபேர் பூஜ்ய டிகிரிக்கும் குறைவான கடும் குளிர்காற்றை எதிர்கொள்ள நேரிடும் எனவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!