4 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் அதிகாலையில் பனிமூட்டம்!

 
பனிமூட்டம்
 

வட தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை அதிகாலையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இந்த நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் பிப்.7 முதல் பிப்.12 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.

பனிமூட்டம்

பிப்.7 முதல் 10 வரை வட தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை நேரங்களில் சாலைகளில் காட்சி தூரம் குறைய வாய்ப்பு உள்ளது.

பனிமூட்டம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதே நேரத்தில் அதிகாலையில் சில இடங்களில் மிதமான பனிமூட்டம் உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!