130 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு… பனிக்குள் மூழ்கிய நகரம்... பகீர் வீடியோ!
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவு பதிவாகி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனி பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகரமே வெண்மையாக மாறி, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
🚨More insane footage coming out of Kamchatka, Russia where they have had the largest snowfall in 130 years.😳 pic.twitter.com/nfU3sxR0QK
— Don Keith (@RealDonKeith) January 19, 2026
வைரலாகும் வீடியோக்களில், கட்டிடங்கள் முழுவதும் பனிக்குள் புதைந்துள்ள காட்சிகள் வெளியாகி வருகின்றன. சில இடங்களில் பல மாடி கட்டிடங்களின் மேல் தளங்கள்கூட பனியில் மறைந்துள்ளன. ஒரு காட்சியில், காருக்குள் அமர்ந்த நபர் ஸ்டீயரிங் திருப்பினாலும், வெளியே சாலை எங்கே என்று தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்துள்ளது.
இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன. “இத்தனை பயங்கர பனிப்பொழிவை வாழ்நாளில் பார்த்ததே இல்லை” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இயற்கையின் இந்த கோர முகம் கம்சட்கா மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
