ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் உறைபனி … யூகலிப்டஸ் இலைகள் அதிகரிப்பு!
பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் யூகலிப்டஸ் மரங்களில் இலைகள் அதிகமாக வளர்ந்து வருகின்றன. இதனால் நீலகிரி தைலம் உற்பத்தி இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இலைகள் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எரிபொருள் தேவைக்கும், சதுப்பு நிலங்களில் தண்ணீரை உறிஞ்சவும் யூகலிப்டஸ் மரங்கள் நடவு செய்யப்பட்டன. பின்னர் இந்த மர இலைகளில் இருந்து தைலம் தயாரிக்கும் தொழில் வளர்ச்சி பெற்றது. நீலகிரி தைலம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மரங்கள் அழிப்பு மற்றும் வனத்துறை கட்டுப்பாடுகள் காரணமாக சமீப காலங்களில் உற்பத்தி குறைந்திருந்தது. இருந்தாலும் தற்போது சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பனி அதிகமாக இருப்பதால் மரங்கள் பச்சை பசேல் என காட்சி அளிக்கின்றன. இதனால் வழக்கத்தை விட கூடுதல் தைலம் உற்பத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
