கடும் பனிப்புயல் … அமெரிக்காவில் 13000 விமானங்கள் ரத்து!
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சில பகுதிகளில் பனிப்புயலும் வீசி வருகிறது. இந்த வார இறுதியில் பனிப்புயல் மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பனிப்பொழிவு காரணமாக பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகள் முழுவதும் பனி மூடியதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்நிலையில் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைந்துள்ளனர். பனிப்புயல் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதால் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
