பனிப்புயலிலும் பிரியாத நட்பு… 3 நாட்கள் எஜமானரை காத்த நாய்!
இமாச்சலப்பிரதேசம் சம்பா மாவட்டம் ஹரீர் கிராமத்தை சேர்ந்த யூடியூபர் விக்சித் ரானா (19), மல்ஹொடா கிராமத்தை சேர்ந்த சிறுவன் பியூஷ் குமார் (14) ஆகியோர் கடந்த 23-ம் தேதி பனிப்படர்ந்த மலையில் வீடியோ எடுக்க மலையேறினர். விக்சித் தனது செல்லப்பிராணி நாயையும் உடன் அழைத்து சென்றார். அப்போது திடீரென பனிப்புயல் வீசியதில் இருவரும் மலையில் சிக்கினர்.
நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், மலையேற்ற வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மூன்று நாட்கள் நடந்த தேடுதலுக்குப் பிறகு, பனிபடர்ந்த வனப்பகுதியில் இருவரின் உடல்களும் நேற்று மீட்கப்பட்டன.
விக்சித் ரானாவின் உடலருகே அவரது செல்லப்பிராணி நாய் படுத்தபடியே காவலாக இருந்தது அனைவரையும் நெகிழ வைத்தது. கடும் பனியும் புயலும் இருந்தபோதும் எஜமானரை விட்டு விலகாமல் நாய் மூன்று நாட்கள் உடலை பாதுகாத்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் உணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
