இதுவரை 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன... ரிசர்வ் வங்கி தகவல்!

நாடு முழுவதும் இதுவரையில் 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்ள அதே ஆண்டு அக்டோபர் 7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அலுவலகங்களுக்கு தபால் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி தங்கள் வங்கிக்கணக்கில் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு மக்கள் தங்களிடம் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வந்தனர். இதன் மூலம் 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்நிலையில் 2023 மே 19ம் தேதி நிலவரப்படி ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், நேற்று முன்தினம் நிலவரப்படி வெறும் ரூ.6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே மக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!